ஆண்களுக்கான சிறந்த மற்றும் வசதியான உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனமான XYXX விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கான சிறந்த மற்றும் வசதியான உள்ளாடைகள் XYXX பிராண்ட் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை அதன் உள்ளாடைகளுக்கான முதல் விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.
சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் பிராண்டிற்கு இடையேயான இந்த தொடர்பு XYXX பிராண்டை இந்திய சந்தையில் ரசிகர்களின் விருப்பமான பிராண்டாக உருவாக்கி வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கும்.
இது XYXX அவர்களின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. மேலும் இது அதன் ஆன்லைன் வர்த்தகத்தை வலுப்படுத்தும். அத்துடன் தற்போது விளம்பர தூதராக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் இந்த உள்ளாடைகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பகுதி மக்களிடமும் சென்றடையும்.
கடந்த ஆண்டு XYXX நிறுவனம் சாஸ்.விசி, டிஎஸ்ஜி கன்ஸ்யூமர் பார்ட்னர்ஸ் மற்றும் சினெர்ஜி கேபிடல் பார்ட்னர்ஸ் ஆகியோரிடம் இருந்து 30 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது. மேலும் தற்போது இந்நிறுவனத்தின் முதலீட்டாளராக கே.எல். ராகுலும் இணைகிறார்.
யோகேஷ் கப்ரா தலைமையில், ஆண்களுக்கான உள்ளாடை தயாரிப்பில் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் துவங்கப்பட்ட நாள் முதல் புதுமை, கைவினைத்திறன், சிறந்த வடிவமைப்பு மற்றும் வாடிக்கையாளர் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உள்ளாடைப் பிரிவில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தனது தயாரிப்புகளை உருவாக்க XYXX செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் புதுமையான உள்ளாடைகள், ஓய்வு ஆடைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடைகள் ஆகியவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ஆடைகள் அனைத்து இந்தியாவிலேயே இங்கு உள்ள தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற முறையில் தயாரிக்கப்படுகின்றன.