Nexon EV – மிக ‘வேகமான’ K2K டிரைவ் சாதனையைப் படைக்கவுள்ளது

Nexon-EV-at-Srinagar.jpg

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரும், இந்தியாவின் EV பரிணாம வளர்ச்சியின் முன்னோடியுமான Tata Motors, அதன் மின்சார SUV – Nexon EV ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரு சவால் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதை அறிவித்தது. பிப்ரவரி 25 துவங்கி, EVகளின் மிக வேகமான K2K டிரைவ் என்ற சாதனையைப் படைத்திடும் வகையில் Nexon EV 4 நாட்களில் 4000 கிமீகளை இடைநிற்காமல் கடக்கவுள்ளது (வாகனம் சார்ஜ் செய்வதற்கு மட்டுமே நிறுத்தப்படும்). Tata Motors அதன் Nexon EVயின் வரம்பை 453 கிமீகளாக அதிகரித்து சீரான அனுபவத்தை உயர்த்தியுள்ளது மற்றும் Tata Power நாடு முழுவதும் நெடுஞ்சாலை சார்ஜிங் உள்கட்டமைப்பை முறையாக மேம்படுத்தி, பொது சார்ஜிங்கை எங்கேயும், எளிதாகவும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது.

இந்த பயணத்தில், Nexon EV கடுமையான வானிலை மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் பல கடினமான நிலப்பரப்புகளைக் கடக்கும். இந்த முயற்சியானது, அதிவேக மற்றும் நீண்ட தூர பயணத்தை நிர்வகிப்பதில் Nexon EVயின் திறமையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மேலும் நாடு முழுவதும் பொது சார்ஜிங் நெட்வொர்க் கிடைப்பதை வெளிப்படுத்துகிறது .

இந்த உற்சாகமான பயணம் குறித்து, டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட், மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் சேவை வியூகத்தின் தலைவர், விவேக் ஸ்ரீவத்சா அறிவித்தார்.

scroll to top