KTM RC CUP – அதிரடிப் போட்டிக்குத் தயாராகும் கோயம்புத்தூர்​

4.-KTM-RC-CUP-Coimbatore-Group-Pic--scaled.jpg

​​ உலகின் நம்பர் 1 பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டான KTM, இந்தியாவின் மோட்டார் விளையாட்டுத் தலைநகரான கோயம்புத்தூரில், கரி மோட்டார் ஸ்பீட்வேயில், இந்தியாவின் மிகப்பெரிய ரேசிங் சாம்பியன்ஷிப்பான KTM RC CUPன் ஏழாவது சுற்றில் கால்பதிக்கிறது. RC CUP என்பது KTM Pro-XPயின் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்

Dakar, MotoGP, Motocross (MX), Supercross (SX) மற்றும் Enduroபோன்ற அனைத்து பந்தய வடிவங்களிலும் 334+ உலக சாம்பியன்ஷிப் பட்டங்களுடன், READY TO RACE பிராண்டான KTM மோட்டார்​ ​ஸ்போர்ட்ஸில் நீடித்த 70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் சாம்பியன்ஷிப்பிற்கான பதிவு மிகுந்த வரவேற்ப்பினைப் பெற்றுள்ளது மற்றும் சுமார் 180 ரேஸர்கள் ‘Ready to Race’ KTM RC 390 GPயை ஃபினிஷ் லைன் வரை ஓட்டும் சிலிர்ப்பான சாகச அனுபவத்தைப் பெற்றனர். தகுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 வேகமான வீர்கள் – சூர்யா, நவநீத் குமார், அமர்நாத், ராஜ் குமார், ஆல்வின் சேவியர், ருஷப் ஷா, ஆனந்த் என், ஸ்ரீ ராம் எஸ், நரேஷ் கனமே மற்றும் முகமது ஷஹாஸ்

RC கப் தேர்வுகளுக்காக இந்த வார இறுதியில் (11,12 மார்ச் 2023) சென்னையில் அதன் அடுத்த தேர்வுச் சுற்றுக்கு நகரும், அதைத் தொடர்ந்து சென்னையில் இறுதிப்போட்டி நடைபெறும்.

KTM RC CUP இன் நிலைகள்:
●       தேர்வுகள்: ரேஸ் அகாடமி மற்றும் நகரம் முழுவதும் தேர்வுகள் – கோயம்புத்தூர், சென்னை
●       தகுதிச் சுற்று: சென்னையில் நடைபெறும் தகுதிச் சுற்றில் எட்டு நகரங்களில் இருந்து தலா முதல் 10 இடங்களைப் பெறுபவர்கள் போட்டியிடுவார்கள்
●       இறுதிப் போட்டி: KTM RC CUPன் இறுதிப்போட்டியில் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் முதன்மையான இடம் பிடித்தவர்கள் பந்தயத்தில் ஈடுபடுவார்கள்

KTM RC கோப்பையின் முதல் 3 வெற்றியாளர்கள் ஆஸ்திரியாவில் உள்ள KTM இன் உலகளாவிய தலைமையகத்திற்குச் செல்லும் வாய்ப்பினைப் பெறுவர். மேலும் பரிசில் உட்பட்டுள்ளவை:

●       ஆஸ்திரியாவில் ரேஸ் இயக்குனருடன் பயிற்சி
●       KTM  தொழிலக ரேசிங் வீர்களுடன் உரையாடுதல்
●       ரெட் புல் ரிங்கில், ஒரு MotoGPTM பந்தையத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு
●       மதிப்புமிக்க KTM மோட்டோஹாலைப் பார்வையிடும் வாய்ப்பு.

500சிசி பிரிவில் இரண்டு போடியம் ஃபினிஷிங் மற்றும் 250சிசி பிரிவில் வெற்றி பெற்ற முன்னாள் மோட்டோஜிபி பந்தய வீரர் ஜெர்மி மெக்வில்லியம்ஸ், KTM RC CUPன் ரேஸ் இயக்குநராக உள்ளார். ஏழு முறை தேசிய INMRC சாம்பிய​​ன் பட்டம் வென்றவரும் மற்றும் இந்தியாவின் கஸ்டோ ரேசிங் நிறுவனருமான இம்மானுவேல் ஜெபராஜ் போட்டி முழுவதும் பந்தய நிபுணராக செயலாற்றவுள்ளார்.

​​இந்நிகழ்வில் பேசிய, பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (புரோபைக்கிங்) தலைவர் சுமீத் நரங் அவர்கள், “KTM RC கோப்பையின் கடைசி கட்டத்தை நாங்கள் கிட்டத்தட்ட அடைந்துவிட்டோம். இப்பயணம் முற்றிலும் த்ரில்லாக இருந்தது. KTMமின் முக்கிய DNA ரேசிங் ஆகும். இது, நாடு முழுவதும் உள்ள பல பந்தய ஆர்வலர்களுடன் இணைவதற்கு எங்களுக்கு உதவியுள்ளது. கோயம்புத்தூர் பங்கேற்பாளர்களின் உற்சாகத்தைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். பெங்களூரில் இருந்து பரவசமான வரவேற்ப்பினைக் கண்டுள்ள நாங்கள் அனைத்து KTM இந்திய ரசிகர்களையும் பந்தயத்திற்குத் தயார்படுத்துவதை ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.

scroll to top