சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் – நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

modi-vande-bharat-scaled.jpg

கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை நாளை (8 ஏப்ரல்) மாலை பிரதமர் மோடி சென்னை சென்ட்ரலில் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க பட உள்ளது. தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நேரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமையை தவிர மற்ற 6 நாட்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் நாளை இரவு 10 மணிக்கு கோவை ரயில் நிலையம் வருகிறது. பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து சென்னை நோக்கி புறப்படும்.

scroll to top