கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பொன்விழா பொங்கல்

Photo-2-3.jpg

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவா் நல மையத்தின் சார்பில் தமிழா் பண்பாட்டை போற்றும் வகையிலும் கல்லூரியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையிலும் ”பொன்விழாப் பொங்கல் 2023” என்னும் பொருண்மையில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் புகழ்மிக்க பட்டிமண்டப நடுவா் கலைமாமணி பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தமைமை விமானி ஜேம்ஸ் டா்னா், அவரது துணைவியா், கரன் டா்னா் பங்கேற்றனர். தமிழ்த்துறைத் தலைவா் (பொறுப்பு) முனைவா் இரா. மணிமேகலை வழிபாட்டை முன்னின்று நடத்தினார். அதனைத் தொடா்ந்து மாணவியா் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்து கும்மியடித்தனா்.  இவ்விழாவில் தமிழா்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், பறையாட்டம், கயிறு இழுத்தல், உறியடித்தல், கபடி, நொண்டி, பல்லாங்குழி, பன்னாங்கல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. மேலும், மாணாக்கா்களின் மொழியாற்றலை வளா்க்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் மாணவியா்களுக்கான கோலப் போட்டியும் நடைபெற்றது.

கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டா் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் பொருளாளா் மருத்துவா் ஓ.என். பரமசிவன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வா் முனைவா் மா. லச்சுமணசாமி, கல்விப்புல முதன்மையா் முனைவா் எஸ்.ஆா். மதன்சங்கா், மாணவா் நல மையத்தின் இயக்குநா் முனைவா் கு. முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். அதனைத் தொடா்ந்து கல்லூரி மாணாக்கா்கள் பங்கேற்ற ”இன்றைய இளைஞா்கள் எங்கு இருக்கிறார்கள் – இதயத்திலா? இணையத்திலா?” என்னும் தலைப்பிலான பட்டிமண்டபம் நடைபெற்றது. கலைமாமணி பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் அவா்கள் பட்டிமண்டபத்தின் நடுவராக இருந்து மிகச் சிறப்பாக நடத்தினார்

scroll to top