கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் பொழுது மருத்துவ மனைகளின் தேவைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவைகள் பண் மடங்கு உயர்ந்தது நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க பல சவால்களை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. தற்பொழுது கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதன்படி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவமனைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல தயார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் BOSCH (போஷ்ச்) நிறுவனம் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள் (CSR) மூலம் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்க முன்வந்துள்ளது. ரூபாய் 1.60 கோடி மதிப்பில் BOSCH (போஷ்ச்) நிறுவனம் CSR திட்டத்தின் மூலம் ஏகம் அறக்கட்டளை மூலம் குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் நவீன முறையில் உள் கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு க்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அளிக்க முன்வந்துள்ளது. அதற்கான திட்டம் செயல்படுத்துவதற்கு திட்ட ஒப்புதல், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்.நிர்மலா – முதல்வர் அவர்களிடம் BOSCH (போஸ்ச்) மற்றும் ஏகம் அறக்கட்டளை அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு வசதிகள் மேம்படுத்தப்பட்டு அதிக அளவிலான நோயாளிகள் பயன் பெறுவார்கள். மேலும் கோவிட் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை எதிர் கொள்ள வசதியாக அமையும்.