80 அடிக்கும் மேலாக ஆழம் கொண்ட கிணற்றில் 4 இளைஞர்களுடன் கவிழ்ந்த கார் மூன்று பேர் பலி

Pi7_Image_WhatsAppImage2022-09-09at09.53.22.jpeg

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன் (18), தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில் தன்னுடைய நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார். தென்னமநல்லூர் பகுதியில் வளைவில் திருப்பும் போது கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சுமார் 80 அடிக்கும் மேலாக ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ரோஷன் தப்பித்துவிட்டார்  உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ்(18), விவேக்பாபு(18), நந்தனன்(18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்று வருபவர்கள்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் என 20ற்க்கும் மேற்ப்பட்டோர் நீரில் மூழ்கிய காரையும் உயிரிழந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

scroll to top