73 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

இந்திய நாட்டின் 73- வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே இருப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகையின் போது, வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, ரயில் நிலையத்தில் பார்சல் சர்விஸ், கார்பார்கிங் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம், தடுப்பதற்காக மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

scroll to top