6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ஏ.ஆர். ரஹ்மானின் ஆடை

a-r-rahman-e1648045817781.jpg

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருப்பவர் இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்.இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28-ம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆடைகளை வாங்க இயலாதவர்களுக்கு நிதி கொடுத்து உதவும் திட்டத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதை, பிரமோத் சுரடியா என்பவர் ஏலம் மூலம் வாங்கினார்.

scroll to top