5-ம் ஆண்டில் `தி கோவை ஹெரால்டு’ பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

pen1.jpg

THE KOAVI HERALD

அன்பிற்கினிய வாசகர்களே…
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் ‘தி கோவை ஹெரால்டு’ பத்திரிகை.
எங்கள் பத்திரிகை மீதான உங்கள் எதிர்பார்ப்பும், அன்பும் அதிகரித்துக்கொண்டே போவதை உணர்ந்திருக்கிறோம். விளைவாக, எங்கள் பொறுப்பும் கூடுகிறது.
தொடங்கப்பட்டது முதலே செய்திகளைத் தாண்டி, வாசகர்களுக்கு பல்வேறு விஷயங்களைக் கொடுத்து வருகிறோம்.
தற்போது 5-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டி நடத்தத் திட்ட மிட்டுள்ளோம்.இந்தியாவின் எதிர்காலம் இளைஞர் கள் மற்றும் மாணவர்களின் கையில்தான் அமைந்துள்ளது. மாணவர்களின் எதிர்காலமோ கல்வியைத் தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.எனவேதான், தேசத்தின் வளர்ச்சியையும், கல்வித் துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு கட்டுரைப் போட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 3 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் கட்டுரைகள் தி கோவை ஹெரால்டு' பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட உள்ளன.அரசுப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள்இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள்’ என்ற தலைப்பிலும், தனியார் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்வித் தரத்தை மேம்படுத்துவத ற்கான திட்டங்கள்' என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகள்கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்’ என்ற தலைப்பிலும் கட்டுரைகளை அனுப்பிவைக்க வேண்டும்.ஒவ்வொரு கட்டுரையும் தலா 200 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். வரும் ஜூலை 31-ம் தேதி வரை கட்டுரைகளை அனுப்பிவைக்கலாம்.மாணவ, மாணவிகள் தங்களது கட்டுரைகளை “ஆசிரியர், தி கோவை ஹெரால்டு வார இதழ், 27, விநாயகர் கோயில் தெரு, கிருஷ்ணசுவாமி நகர், ராமநாதபுரம், கோவை – 641045” முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்க வேண்டும். அல்லது thekovaiherald@gmail.com என் இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 92443117182 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். கட்டுரைகளைத் தேர்வு செய்வதில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.இந்தக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். கோவை லக்ஷகா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அன்புச் செல்வங்களே, கட்டுரை எழுதுவதில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி, பரிசை வெல்லுங்கள். உங்கள் கட்டுரை `தி கோவை ஹெரால்டு’ பத்திரிகையில் பிரசுரமாகும் வாய்ப்பையும் பெறுங்கள். வாழ்த்துகள்…

KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top