தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும், ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்தது. கடந்த ஜனவரி 14ம் தேதி முதல் நேற்று வரை அனைத்து வழிபாட்டு தலங்களும் மூட உத்தரவிடப்பட்டது. வழிபாட்டுத் தலங்களில் தினசரி நடைபெறும் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. தைப்பூச நாளன்று முருகன் கோவில்களில் அபிஷேகம் சிறப்புப் பூஜை ஆகியவை பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. . பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 5 நாட்களாகக் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை முதலே சாமி தரிசனத்திற்காக வழிபாட்டு தலங்களில் குவியத் தொடங்கி உள்ளனர்.