47-வது வார்டின் உங்க வீட்டுப் பிள்ளை கட்சிக்கு என்றும் செல்லப்பிள்ளை

prabha-01.jpeg

அதிமுக வேட்பாளர்
ஆர்.பிரபாகரன்

சரித்திர காலம் தொட்டு கோவை நகருக்கு பல பெருமைகள் உண்டு.பல மன்னர்களும், பல குறுநில மன்னர்களும் கோவையை ஆட்சி புரிந்திருக்கின்றனர் .1865-ம் ஆண்டு கோவை நகர சபை உருவாக்கப்பட்டது. நகரசபைக்கு நியமனம் செய்யப்பட்டவர்களே கோவை நகரினை நிர்வகித்து வந்தனர்.
தமிழகத்தில் பல சரித்திர சாதனைகள் படைத்த புரட்சித்தலை வர் எம்ஜிஆர், 1981-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த பொழுது, சிங்கா நல்லூர் நகரா ட்சியை, கோவை நகரத்துடன் இணைத்து மாநகராட்சி யாக தரம் உயர்த்தப் பட்டது.
அன்று முதல் இன்று வரை கோவை மாநகராட்சி பெரும் வளர்ச்சி பெற்று வரு கிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெரும் ஆலமரத்தின் விழுதாக இருந்து அக்கட்சியை கட்டி காப்பவர்கள், அக்கட்சித் தொண் டர்கள். அதிமுக என்ற குடும்பத்தில் விசு வாசத்துடன் மக்கள் பணிகள் செய்து மாண்பை பெற்று உயர்ந்தவர்கள் பலர். கட்சியின் பொன்விழா வின் 50 ஆண்டு கால வரலாற்றில் 40 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, வி.என். ஜானகி, ஓ. பன் னீர்செல்வம்,
எடப்பாடி கே. பழனி சாமி ஆகியோர் திறம்பட ஆட்சி புரிந்துள்ளனர். அதிமுக-வின்
பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா இக்கட்சியினையும்,தமிழகத்தினையும் எங்கு கோட்டையாக இருந்து காப்பாற்றினார்.
எனக்குப்பின் அதிமுக 100 ஆண்டு காலம் உயிர்ப்புடன் இருந்து மக்கள் சேவை செய்யும் என முழங்கியவர்.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அதிமுகவின் 47- வது வார்டு (பழைய 48-வது வார்டு ) வேட்பாளராக போட்டியிடுபவர் ஆர்.பிரபாகரன்.
1973-ம் ஆண்டு
ஜனவரி — 31 ,ம் தேதி V.ராமசாமி கவுண்டர்- பாக்கியம் தம்பதி யினருக்கு மகனாக பிறந்த ஆர்.பிரபாகரன், பேபி ராணி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். நாராயண குரு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். மிகச் சிறந்த கல்வியாளரான பிரபாகரன், BA.,BGL., DECE.,MBA., ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.தனது தந்தையார் ராமசாமி கவுண்டர்திராவிட சிந்தனையுடன் அதிமுகவில் இருந்த தால், பிரபாகரனுக்கு இயற்கையாகவே அதி முகவின் பரிச்சயம் எளிதில் கிட்டியது.
1991-ம் ஆண்டு ரத்தினபுரி பகுதியின் எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொறுப்புக்கு வந்தார்.தொடர்ந்து அம்மா பேரவை துணை செயலாளராகவும், மாநகர் மாவட்ட மாணவரணி தலைவராகவும், இளைஞர்,இளம் பெண்கள் பாசறை மாநகர்மாவட்ட செயலாளராகவும் பதவி உயர்வு பெற்று திறம்பட பணியாற்றி கட்சியின் அனைத்து தரப்பு தலைவர்களி டத்திலும் அன்பைப் பெற்றார். தற்போது மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பணி யாற்றி வருகிறார்.
2001,2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கோவை மாநகராட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று, மக்கள் பணியினை செவ்வனே செய்தவர்.
முத்து நகர், பூம்புகார் நகர் ஜிபிஎம் நகர், விஸ்வநாதபுரம், கணேஷ் நகர் ,சாஸ்திரி ரோடு,கணேசு் வீதி, ஜீவி ராமசாமி வீதி, ரங்கண்ண கவுண்டர் வீதி,கல்கி வீதி, பழனி கவுண்டர் வீதி, ஆறுமுக கவுண்டர் வீதி, சுப்பைய கவுண்டர் வீதி, நால்வர் நகர், செல்லப்ப கவுண்டர் லேஅவுட், கிருஷ்ணசாமி வீதி, நாச்சிமுத்து நகர், லட்சுமிபுரம் ,குமாரசாமி கவுண்டர் வீதி, இந்திராநகர், பிஎம் சாமி காலனி உள்ளிட்ட பகுதிகளை கொண்ட 47- வது வார்டில் 6 ஆயிரத்துக்கும் அதிக மான குடியிருப்புகள் உள்ளன. 15,800 வாக்காளர்கள் நிறைந்த இந்த பகுதியில், நடுத்தர மக்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
ரத்தினபுரிக்கு உட்பட்ட 47 -வது வார்டில் மூன்று முறை இப்பகுதி மக்களால் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பிரபாகரன்.வரிவிதிப்பு குழு மற்றும் நிதிக் குழு தலைவராக இருந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு சிறப்பு சேர்த்தவர். கடந்த 20 ஆண்டு காலத்தில் இரத்தினபுரியை இரத்தினபுரி கோட்டையாக்கி வைத்துள் ளார். 250 கோடி ரூபாய் மதிப்பிலான பெரும் வளர்ச்சி பணிகளை ரத்தினபுரி பகுதி மக்களுக்காக செய்து பேரன்பை பெற்று தொடர்ந்து மக்கள் சேவை செய்து வரு கிறார்.
கடந்த இருபது ஆண்டு காலமாக இவர் முழு மூச்சாக இருந்து நிறைவேற்றி கொடுத்துள்ள பணிகள் தான், ரத்தினபுரியின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டது என இங்கு உள்ள அனைத்து தரப்பு மக்களும் கூறுகின்றனர். களத்தில் நின்று பொது மக்களுக்கு சேவை செய்வதை பெரும் பேறாக கருதுகிறேன் என வார்டு பகுதி முழுவதும் உற்சாகமாக வலம் வருகிறார் ஆர். பிரபாகரன் .இளமை துடிப்புடன் பணி யாற்றும் ஆர். பிரபாகரனை இப்பகுதி மக்கள் அனைவரும் பெரிதும் விரும்புகின்றனர் .
கடந்த 20 ஆண்டு காலமாக தான் சார்ந்திருக்கின்ற அதிமுகவும், ரத்தினபுரி மக்களும் கொடுத்த மாமன்ற உறுப்பினர் என்ற வாய்ப்பினை பயன்படுத்தி மத்திய, மாநில, மாநகராட்சி நிர்வாகத்துடன் இணக்கமான முறையில் இருந்து யாரும் செய்ய முடியாத வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளார். ஆர். பிரபாகரன் முயற்சியி னால் வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தார் சாலை அமைத்து கொடுத்ததுடன், தார் சாலை அமைக்க இயலாத சில பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தெருக்க ளுக்கும் இரவில் ஒளிரும் எல்இடி 900 விளக்குகளை அமைத்துக் கொடுத் துள்ளார். அனைத்து பகுதியிலும் பாதாள சாக்கடை அமைக் கப்பட்டு அவற்றிற்கு தற்போது இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தங்குதடை யில்லாமல் போக்கு வரத்து வசதிக்காக ரத்தினபுரி பகுதியை சங்கனூருடன் இணைக்கும் ரயில்வே மேம்பாலம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது .கடும் போக்குவரத்து நெரிசலாக இருந்த
7-வது வீதி தொடர்ச்சியும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையையும் ரத்தின புரியுடன் இணைக்கும் பகுதியில் உள்ள பாலத்தினை விரிவு படுத்த பட்டுள்ளது .பி எம் சாமி காலனியினை மூன்றாவது வீதி தொடர்ச்சியுடன் இணைக்கும் வகையில் சங்கனூர் பள்ளத்தின் மேல் சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் வழிகாட்டு தலின்படி புதிய காவல் நிலையம், மின்சார அலுவலகம், தபால் நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு ள்ளது.வார்டில் உள்ள மாணவ- மாணவியர், இளைஞர்களின் நலன் கருதி நூலகம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக் கப்பட்டுள்ளது .ஜிபிஎம் நகரில் நடை பயிற்சியுடன் கூடிய விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள் ளது. கணேஷ் நகர், வ உ சி நகர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப் பட்டுள்ளது .தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு 20க்கும் அதிகமான இடங்களில் ஆழ்துளை பம்பு அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
காந்திபுரம், ஒண்டி புதூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளிலி ருந்து ரத்தினபுரி வந்து செல்லும் வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது .
மத்திய அரசின் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது .சின்னம்மாள் வீதியில் 5 ரேஷன் கடைகளும் ,ராமசாமி வீதியில் ஒரு ரேஷன் கடையும் என மொத்தம் ஆறு ரேஷன் கடைகள் கொண்டு வரப்பட்டுள்ளது . முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த பொழுது இலவச மிக்சி கிரைண்டர் 6 ஆயிரத்துக் கும் அதிகமானோருக்கு பெற்றுத் தந்துள்ளார் ஆர் .பிரபாகரன் .திமுக ஆட்சியின்போது 5700 நபர்களுக்கு இலவச டிவி பெற்றுத் தந்துள்ளார். தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் திருமணத்தின் போது பல பெண்களுக்கு தாலிக்கு தங்கமும் ரூ 50 ஆயிரம் ரொக்கப் பணமும் பெற்றுக் கொடுத்துள்ளார் அதிமுக வேட்பாளர் ஆர்.பிரபாகரன்.
முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 12,000 ரூபாய் தகுதி உள்ள பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் உள்ள சுகாதார மையத்தினை நவீன மயமாக்கி ஸ்கேன் வசதியுடன் பிரசவம் பார்க்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தவர் ஆர். பிரபாகரன் .ரத்தினபுரி பகுதியில் உள்ள 600-க்கும் அதிகமானோ ருக்கு முதியோர் பென்ஷன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 பெறுவதற்கு ஆர். பிரபாகரன் ஏற்பாடு செய்தவர்.இப்பகுதியிலுள்ள 500 -க்கும் மேற்பட்டோ ருக்கு இலவச கேஸ் அடுப்பு பெறுவதற்கு பேருதவியாக இருந்தவர். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் கனவு திட்டமான அனைவருக்கும் கான்கிரீட் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மூலம் 750 நபர்களுக்கு வீடுகட்ட ரூ.2 லட்சத்து பத்தாயிரம் இலவசமாக பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றார் ஆர்.பிரபாகரன் .அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங் களை பெற்றுக் கொடுத்துள்ளார், 2023-க்குள் அனைவருக்கும் வீடு திட்டமான P’my திட்டத்தின் படி ரத்தினபுரி பகுதியில் உள்ள 4800 நபர்களுக்கு பதிவு செய்து உதவி புரிந்துள்ளார் ஆர்.பிர பாகரன். ஏப்ரல் மே ஜூன் ஜூலை மாதங்களான கோடை காலத்தில் கூட குழாய் மூலம் தண்ணீர் வினி யோகத்தை முறைப் படுத்தி உறுதி
செய்யப்பட்டுள்ளது.அம்மா மினி கிளினிக் கொண்டு வரப்பட்டு, ரத்தினபுரி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சுகாதாரம் பேணப்பட்டு வருகிறது. .அனைத்து வீதிகளிலும் உப்புத்தண்ணீர் பைப் போடப்பட்டுள்ளது.
கொரனோ காலகட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு ஒரு மாதம் மளிகை பொருள் ,காய்கறி சொந்த செலவில் வழங்கப்பட்டுள்ளது .கொரோனோ இரண்டாவது அலை தாக்கத்தின் போது ,அனைத்து வீடுகளுக் கும் காலை 7 மணி முதல் 10 மணி வரை
4 மாதத் திற்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
1 லட்சம்முக கவசம் வழங்கப்பட்டது .
வார்டில் உள்ள 6000 வீடுகளுக்கும் ஹோமியோபதி சத்து மாத்திரை வழங்கப்பட்டது. வார்டு பகுதி முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமை யாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் வாக்குறுதியாக பிரபாகரன் கூறும் போது, ஏற்கனவே செய்யப்பட்ட சாலை சாலை, சாக்கடை வசதி ,தெருவிளக்கு ஆகியவற்றினை சிறந்த முறையில் பராமரிப்பு செய்யப்படும் .முத்துக்குமார் வீதியில் நடைபாதையுடன் கூடிய குழந்தைகளு க்கான பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும். வார்டு பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொரு த்தப்படும் என தெரிவித்தார்.
புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட டெக்ஸ் டூல் பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட் டம் இல்லாமல் இருந்தது. இதனை ஆர்.பிரபாகரன் கருத்தில் கொண்டு பொது மக்களை திரட்டி மாபெரும் சாலை மறியல் நடத்தினார். இதன் பயனாக அங்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
திமுக ஆட்சியின்போது மாமன்றத்தில் குப்பை க்கு வரி போடும் தீர்மானத்தினை கொண்டு வந்தனர். இதற்கு மாபெரும் எதிர்ப்பு தெரிவித்து மாமன்றதிலேயே ஆர். பிரபாகரன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத் தினர். இதற்காக பிர பாகரன் உள்ளிட்ட அனைத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மீது திமுக தரப்பினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் நடை பெற்ற அனைத்து இடைத்தேர்தல்களி லும் பணியாற்றி அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட்டவர். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பல போராட்டங்கள் மறியல்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
அதிமுகவின் மாநில, மாவட்ட தலைவர்களின் மிகுந்த அன்பைப் பெற்ற ஆர்.பிரபாகரன் கட்சியில் அனைத்து தரப்பினருக்கும் பிரியமானவராய் திகழ்கிறார். கோவை மாநகர் அதிமுகவின் செல்லப்பிள்ளையாக வலம் வரும்ஆர். பிரபாகரன்,4-வது முறையாக மாமன்ற உறுப்பினராகி ,47-வது வார்டுக்கு இன்னும் பல மக்கள் நலப் பணிகளை செய்து முடிப்பார் என ரத்தினபுரி பகுதி மக்கள் திடமாக நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தான் எல்லா பகுதிகளிலும் ஆர் பிரபாகரனின் பணிகளை பாராட்டுகின்றனர்.
விருப்பமுடன் செய் யும் பணிகள் தான் நின்று நிலை பெறும். அந்தவகையில் ஆர் பிரபாகரனின் சேவை,வரும் 19-ம் தேதி நடைபெறும் கோவை மாநகராட்சி தேர்தலிலும் அவரை மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்வர் என ரத்தினபுரி பகுதி முழுவதும் நாம் வலம் வந்ததில் இருந்து தெரிந்து கொண்டது.நாமும் ஆர். பிரபாகரனின் வெற்றிக்கு வாழ்த்து கூறுவோம் .

scroll to top