4 ஜியை காட்டிலும் 10 மடங்கு வேகமுடைய 5 ஜி சேவை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் -பிரதமர் மோடி

இந்தியா 5 ஜி சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, 4 ஜியை காட்டிலும் 10 மடங்கு வேகமுடைய, தடையில்லா 5 ஜி சேவை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டார். 5 ஜி அலைக்கற்றை ஏலம் 1.5 லட்சம் கோடிக்கு இறுதி செய்யப்பட்ட நிலையில், விரைவான மொபைல் சேவை மட்டுமல்லாது, மேம்பட்ட இணைய ரீதியான மருத்துவ சேவை, மெட்டாவர்ஸ் அனுபவங்கள், உயிர் காக்கும் பயன்பாடுகளுக்கு 5 ஜி பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top