35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது

கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்பட்ட 48,84,700 நகை கடன்களில், 35,37,693 மட்டுமே நகை கடன் தள்ளுபடி பெற முடியும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையில், சலுகையை பெற முடியாதவர்கள் யார் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி, 2021 கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நகை கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது என்றும், ‘40 கிராமுக்கு மேல் வைத்தவர்கள், ஆதார் எண்ணை தவறாக கொடுத்தவர்கள், குடும்ப அட்டை எண்ணை நகை வைக்கும்போது கொடுக்க தவறியவர்கள், கூட்டுறவு சங்க நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நகை கடன் ஆகியவற்றிற்கு இந்த சலுகை பொருந்தாது. வெள்ளை நிற குடும்ப அட்டை வைத்திருந்தவர்கள் மற்றும் உரிய காலத்தில் நகை கடன் திருப்பி செலுத்திவர்களுக்கு இந்த சலுகை இல்லை – போன்ற விஷயங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top