3 பேருக்கு மறுவாழ்வு அளித்த மூளைச்சாவடைந்த 3 வயது குழந்தை

​​தியான் என்ற 3 வயது குழந்தை தனது பெற்றோர்  தந்தை பிரீத்தம் மற்றும் தாய்.திவ்யா ஆகியோருடன் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் குழந்தையின் தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். 08.12.2022 அன்று காலை 10.30 மணிக்கு  அக்குழந்தை விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 14.12.2022-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்  தங்களது குழந்தையின்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.  தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இருதய வால்வ், கல்லீரல் மற்றும், சிறுநீரகங்கள், ஆகியவை தானமாக பெறப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி குழந்தை தியான் குடும்பத்திற்கு  நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

scroll to top