3 தேசிய விருதுகள் பெற்ற ‘அந்நியன்’ பட நடிகர் நெடுமுடி வேணு காலமானார்.

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு (வயது 73)  உடல்நலக்குறைவால்  காலமானார். அவர் கமல் நடித்த இந்தியன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர்.தமிழில், ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாளமயம்’ உட்பட பல படங்களில் நடித்த நெடுமுடி வேணு, இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3 தேசிய விருது,  6 மாநில விருதுகள் பெற்ற சிறந்த குணசித்திர நடிகர்.

இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top