25 வருடம் கழித்து சந்தித்துக் கொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள்

WhatsApp-Image-2023-05-14-at-18.44.06.jpg

மதுரை அரசு சட்டக் கல்லூரியில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், கல்வி பயின்று வழக்கறிஞர்களாக பல பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை அரசு சட்டக் கல்லூரியில் 1993 ஆம் ஆண்டில் சட்டம் படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சந்தித்துக் கொண்டனர். அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஆண்கள் பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி முன்னாள் மாணவர்கள் தனது குடும்பத்தினரோடு சந்தித்துக் கொண்டனர்.

சட்டக் கல்லூரியில் படித்த பிறகு, பல மாணவர்கள் மூத்த வழக்கறிஞர்களாகவும் நீதிபதியாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.பல ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியோடு கல்லூரி கால நினைவுகளை பேசி மகிழ்ந்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் பாடல்கள் பாடி தங்களது மகிழ்ச்சியை வெளி படுத்திக் கொண்டனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்த இந்த நிகழ்வை வழக்கறிஞர்கள் சதீஷ் பாபு, நாஞ்சில் ராஜ்குமார்,அமுதகவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

scroll to top