22வது வார்டில் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

WhatsApp-Image-2022-08-07-at-1.45.40-PM.jpeg

கோவை 22 வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குறிச்சி ரோடு பால்காரர் தோட்டம் பகுதி அருகே கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
கோவை மாநகராட்சி 22வது வார்டு திமுக கவுன்சிலர் கோவை பாபு தலைமை வகித்தார்.

சமூகநீதியின் சாளரமாய்!
சமத்துவத்தின் அடித்தளமாய்!
சரித்திரம் படைத்த அதிசயமாய்..!
பொன்னுடம்பு மறைந்தாலும்
என்றென்றும் அழியா
புகலுடம்பு எய்தி..
இனி வரும்
தலைமுறையும் போற்றி காக்கும்
தமிழ் முழக்கம் தந்து
நம் இதயதுடிப்பாய் நம்மோடு இருந்து இயக்கத்தை காக்கும்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் என புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க (LPF ) மாநில துணைப் பொதுச் செயலாளர், ரத்தினவேலு, 22வது வட்டச் செயலாளர், செல்வராஜ் உட்பட கட்சியினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

scroll to top