2022-ம் ஆண்டு புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

2022-ம் ஆண்டு புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மகிழ்ச்சிகரமான புத்தாண்டான 2022-ல், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.புத்தாண்டின் புதிய உதயத்தில், நம் அனைவரது வாழ்விலும் அமைதி, முன்னேற்றம், சகோதரத்துவம் ஆகியவற்றின் எழுச்சி புத்துயிர் பெறட்டும். “என்று கூறியுள்ளார்.

scroll to top