THE KOVAI HERALD:
திமுக அரசை கண்டித்து கோவையில் டிசம்பர் இரண்டாம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் நடை பெறவுள்ளது. இதில் எடப் பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
இதையொட்டி, ‘‘ரியல் எஸ்டேட், சினிமாத் துறையில் முழு தலையீடு, மக்கள் மீது வரிச்சுமை இப்படி திமுக 2009-ல் என்னென்ன மக்களுக்கு எதிரான விஷயங்களை செய்ததோ, அதை அப்படியே திரும்ப இப்போது செய்து கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் விதமாகத்தான் இந்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. அது மட்டுமல்ல, பாஜகவின் லூட்டியும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்டமும் தாங்க முடிய வில்லை. அவர்களுக்கும் தன் பலத்தை உணர்த்தும் முகமாகத்தான் இந்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடியின் அஸ்திரம்
இது கோவையில் ஆரம்பிக்கிறது. அடுத்த டுத்த மாவட்டங்களுக்கும் இனி பாயும்!’’ என்பது கோவை வட்டாரத்தில் பேசுபொருளாகி யிருக்கிறது.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் குழப்பங்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி அணி, திமுக அரசுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் கோவைக்கு திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை எனக் கூறி, திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைப்ப வர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பது தான் இதில் உள்ள ஹைலைட்.
உண்ணாவிரதம்
இதற்காக கோவை அதிமுக அலுவல கத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சு னன், கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள் ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். இந்தக் கூட் டத்தில் பல்வேறு விஷ யங்கள் பற்றி விவாதிக்கப்பட் டது.
கோவையில் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற் றும் ஊராட்சி பகுதி களில் அத்தனை சாலைகளும் படுமோசம். போன ஆட்சி யில் திட்டமிடப்பட்டு துவக்கப்பட்ட வேலைகள் கூட கிடப்பில் போடப் பட்டுள்ளது. அதனால் திரும்பின பக்கமெல்லாம் குண்டும் குழியுமான சாலையில் பயணிக்க வேண்டி உள்ளது. பல இடங்களில் டூவீலர் கூட செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. தற்போது மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், மேயர் உள்பட யாருமே மக்கள் பணிக்காக வீதிக்கு வருவ தில்லை. மக்கள் மாளாத துன்பத்தில் உள்ளார்கள். ஆனால் இதையெல்லாம் சரி செய்யாத ஆளும் திமுக, மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு, புதிதாக குப்பை வரி என சராசரி மக்களைப் போட்டுத் தாக்குகின்றன. அதையும் தாண்டி விலைவாசி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதை யெல்லாம் கண்டித்து அ.தி.மு.க சார்பில் டிசம்பர் 2-ஆம் தேதி சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டமும் வரவில்லை. நாங்கள் இருந்தபொது பணிகள் வேகமாக நடந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பணிகள் பொறுமையாக நடக்கிறது. கோவைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஒன்றரை வருடமாக எதுவும் செய்யவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது கேட்டாலும் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஆனால் சாலைகளில் அவராலேயே பயணிக்க முடியாத நிலைதான் காணப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன. தற்போது, கொசு மருந்து கூட அடிப்பதில்லை, அரசு மருத்துவமனைக்கு சென்றால் சரியான சிகிச்சை இல்லை, மருந்து இல்லை, எந்த மருத்துவமனையிலாவது மருந்துகள் இருக்கிறதா?’’ என்றவர்,. “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். விளம்பரத்தில் மட்டும் ஓடுகின்ற ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான்!’’ என கடுமை யாகச் சாடினார்.
கோவையில் ஆளும் தரப்பை எதிர்த்து அதிமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருகு்கிறது என்றாலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்க உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப் பது இதுதான் முதன் முறை. எனவே இந்தப் போராட்டம் சகல அரசியல் நோக்கர்களாலும் உற்றுநோக்கப்பட்டு விமர்சிக்கவும்படுகிறது.
கோவை கோட்டை ஈசுவரன் கோயில் அருகே சமீபத்தில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் உட்பட பல விவகாரங்களில் அதிமுகவினர் அமைதி காத்து வந்தார்கள். ஆனால் பாஜகவினர் அந்த அரசியலில் புகுந்து விளையாடினர். அதற்குக் காரணம் சிறுபான்மை மக்கள் கோவையைப் பொறுத்தவரை திமுகவினர் மீது விட அதிமுக வேலுமணி செயல்லாடு மீது மரியாதை வைத்துள்ளார்கள். எனவே தான் அது விஷயத்தில் இவர்கள் அமைதி காத்தார்கள் அதில் பாஜக செய்த அரசியலையும், ஓபிஎஸ் தரும் குடைச்சலையும் முறியடிக்கும் விதத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் விளங்கும் என்று கோவை அதிமுக வினருக்குள் ளேயே பேச்சு நிலவுகிறது.
இதுகுறித்து கோவையின் மூத்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘‘2009-ல் எப்படியெல்லாம் திமுக ஆட்சியில் சினிமாத்துறையில் மோனோ புள்ளியாக மாறன் குடும்பம் புகுந்து விளையாடியதோ, அதே சூழலை இப்போது ஸ்டாலின் குடும்பம் செய்து வருகிறது. அதேபோல் கேபிள் டீவியில் கைவைத்து அதை ஒளிபரப்பு இல்லாமல் செய்து வருகிறார்கள். இதன் மூலம் திமுக குடும்பச் சேனலின் ஆதிக்கம் திரும்ப மேலோங்கிக் கொண்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினஸில் ஜி ஸ்கொயர் படுத்தும் பாடு தமிழக மெங்கு ம்அறிந்த தே. மந் திரி கள் முழுக்க முழுக்க கலெக் ஷனும் கையுமா கவே இருக்கி றார்கள். அதிமுக ஆட்சி யைப் பொறுத் தவரை மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி வந்து நிறைய வேலைகளை செய்தார்கள். அதில் பல்லாயிரக்கணக்கான பணிகள் நடைபெற்றன. எந்த இடத்திலும் பொதுமக்களின் அன்றாடப் பிழைப்பில் கை வைக்க வில்லை. ஆனால் இவர்கள் மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு என சகலத்தையும் ஒரே நேரத் தில் செய்து மக்களைப் பாடாய்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள். சென்னையில் மழை வெள்ளம் தேங்கும் பகுதியை ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார். அதற்கு முதல்வர், ‘எங்கே ஒரிடத்தில் காட்டுங்க பார்க்கலாம் என்று திருப்பிக் கேட்கிறார். அடுத்தது மழை என்று வந்தால் வெள்ளம் வரத்தான் செய்யும், தேங்கத்தான் செய்யும், மழை நின்றபிறகு அது வடிந்தும் விடும்! என்று போகிற போக்கில் சொல்கிறார். இதேபோல் செந்தில்பாலாஜி மின்சார இணைப்புக்கு ஆதார் விஷயத்திலும், மின்கட்டண உயர்வு விஷயத்திலும் மாற்றத்திற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். இந்தப் போக்கை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!’’ என்று தெரிவித்தார்.