தொடர் கனமழை காரணமாக துமகூரில் ஜெயமங்கலி என்ற ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கொரடகரே மதுகிரியின் சுற்று வட்டாரத்தின் நுாற்றுக்கணக்கான கிராமத் தினர் இந்த ஆற்றை நம்பியே உள்ளனர். தண்ணீர் வற்றியதால் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இந்தாண்டு தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை அதிகமாக பெய்ததால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின. 20 ஆண்டுகளுக்கு பின் ஜெயமங்கலி ஆற்றில் முதன் முறையாக தண்ணீர் பாய்ந்தோடுகிறது. காற்றாற்று வெள்ளத்தை பார்த்த ஆற்றங்கரையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.
தங்கள் பகுதிகளில் தண்ணீர் வரும்போது பூஜை செய்து வழிபடுகின்றனர். ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.