நாட்டின் சுதந்திரம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் கூறிய கருத்திற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை யான கங்கனா ரனாவத் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராவார். இவர், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசுக்கு எதிராகவும், பாலிவுட் பிரபல நடிகர்களுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, அடுததடுத்து சர்ச்சையில் சிக்கினார்.இதனிடையே, தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதாவின் கதா பாத்திரத்தில் அவர் நடித்தது தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில், தற் போது இந்திய சுதந்திரம் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் பேசியது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. ஆங் கில ஊடகம் ஒன்றின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்ட கங்கனா, பிரிட்டிஷாரின் அங்கமாகத் தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. 1947ம் ஆண்டு நாம் பெற்றது பிச்சை. உண்மையான சுதந்தி ரம் 2014ஆம் ஆண்டு கிடைத்தது, எனக் கூறினார். அதாவது, 2014ம் ஆண்டு பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சியமைந்ததைகுறிப் பிட்டே அவர் இப்படி கூறி யுள்ளதாகச் சொல்லப் படுகிறது. எனவே, கங்கனா வின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.