174 ரன்களுக்கு இலங்கை அணி ஆல்-அவுட்: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா

india.png

மொஹாலியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி நேற்று இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. காலை ஆட்டம் மீண்டும் துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை 66 ரன்கள் மட்டுமே சேர்த்து 174 ரன்களுக்கு ஆலவுட் ஆனது.இந்தியா சார்பாக் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். 49 ஆண்டுகளில் முதல்முறையாக, ஒரே டெஸ்ட் போட்டியில் 150 ரன்களும் ஐந்து விக்கெட்டையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.

scroll to top