17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

17 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், அம்பத்தூர் துணை ஆணையராக பணியாற்றி வந்த மகேஷ், ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு காவல் ஆணையராக மகேந்திரனும், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக சிபி சக்கரவர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் ஆவடி காவல் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக உமையாள் நியமிக்கப்பட்டுள்ளார்.பரங்கிமலை காவல்துணை ஆணையராக பிரதீப், அண்ணாநகர் துணை ஆணையராக சிவபிரசாத் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

scroll to top