15-18 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 முதல் முன்பதிவு

15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 முதல் முன்பதிவு தொடங்க உள்ளதாகவும், CoWIN செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்த நாட்டு மக்கள் தொகையில் 41.8% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், ஒமிக்ரான் பரவல் தொடங்கியிருப்பதால், ஜனவரி 3ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதன் பேரில், நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு ஜனவரி 1 முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறுவர்களுக்காபன தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/ மற்றும் CoWIN app மூலம் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

scroll to top