147 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; கேப்டனாக கமின்ஸ் 5 விக்கெட்

ஆஷஸ் தொடர் 2021-22-ன் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியிலேயே கமின்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டார்க் முதல் பந்திலேயே கிளீன் பவுல்டு செய்து சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.கார்ட்னி வால்ஷ், அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் கமின்ஸ் முதல் போட்டியிலேயே கேப்டனாக 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரோரி பர்ன்ஸை முதல் பந்திலேயே பவுல்டு செய்த வகையில் ஆஷஸ் தொடரின் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய 2வது பவுலர் ஆனார் மிட்செல் ஸ்டார்க். தேநீர் இடைவேளைக்கு முன்னரே 147 ரன்களுக்குச் சுருண்டது. உணவு இடைவேளைக்கு முன்னரே 4 விக்கெட்டுகளை இழந்து 59 என்று இருந்த இங்கிலாந்து அணி பிறகு ஹசீப் ஹமீது (25) விக்கெட்டை ஸ்மித் கேட்ச் மூலம் கமின்ஸிடம் இழந்தது.

scroll to top