12 – 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

கொரோனா தொற்று பரவலில் இருந்து சிறார்களை பாதுகாத்துக்கொள்ள வரும் மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவாக இருந்து வருகிறது.  இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கிய நிலையில், முதலில் சுகாதார பணியாளர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கும், அதையடுத்து, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களை உடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கடந்த மார்ச் 1-ந்தேதி தடுப்பூசி போடுவது தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. மே 1 முதல் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

அதனையடுத்து, 2022ம் ஆண்டு ஜனவரி  3-ந்தேதி முதல் 15-18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஜனவரி 10ம் தேதி முதல் முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.  தற்போதைய நிலையில் மொத்த மக்கள் தொகையில்  47.5% பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

scroll to top