துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15ஆம் தேதி விகேஎல் நகர் பவர் லயன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகள் ஆக்கப்பட்ட ஆணின் ஒரே இடது கை கிடந்தது. இதை அறிந்த குப்பை வண்டியின் ஓட்டுனர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துடியலூர் போலீசார், எட்டு தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பிரபு என்று கண்டறிந்தனர் மேலும் விசாரணை மேற்கொண்டதில், பிரபு என்பவர் காந்திபுரம் பகுதியில் அழகு நிலையத்தில் வேலை செய்து வருவதாகவும், அவர் குடியிருந்து வந்த பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய சரவணம்பட்டி பகுதியில் அழகு நிலையத்தில் பணி செய்து வரும் திருமணமான கவிதா என்னும் பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக பெண்ணின் நண்பர்கள் ஆன அமுல் திவாகர் (34), கார்த்திக் (28) ஆகியோர் பிரபுவை காந்தி மாநகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்து, பிரபுவின் உடலை 12 பாகங்களாக வெட்டி தனித்தனியாக பல்வேறு இடங்களில் வீசி சென்றுள்ளனர். தனிப்படை காவல்துறையினர் இறந்த பிரபுவின் வெட்டப்பட்ட 8 துண்டு உடல் பாகங்களை கைப்பற்றியும், இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று எதிரிகளை கைது செய்தும், இவ்வழக்கினை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞர்; பெண் உட்பட 3 பேர் கைது.
