தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 11 அரசு மருத்துவ கல்லுாரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மருத்துவ கல்லுாரிகளை விருதுநகர் மருத்துவ கல்லுாரியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. கொரோனா காரணமாக இது காணொலி நிகழ்ச்சியாக மாற்றியமைக்கப்பட்டது. பிரதமர் மோடி டில்லியில் இருந்து இன்று மாலை 4:00 மணிக்கு திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்கின்றனர். விருதுநகர் மருத்துவ கல்லுாரியில் நடக்கும் நிகழ்வில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி, மருத்துவ கல்லுாரி டீன் சங்குமணி பங்கேற்கின்றனர். ராமநாதபுரம், திண்டுக்கல்லிலும் விழா நடக்கிறது.