‘10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை தவிர்க்க வேண்டும்’: சென்னை உயர்நீதிமன்றம்

madras-high-court.jpg

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில்  பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி இறுதி வரை விடுமுறை அளித்துள்ளனர். இருப்பினும், 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பேசிய நீதிபதி:  கொரோனா மூன்றாம் அலை பரவி வரும் சூழலில் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.  ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் பட்சத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

scroll to top