கொரோனா தொற்று குறைந்ததும், கடந்த செப்டம்பர் 1ந்தேதி முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஒமிக்ரான பரவி வருவதால், பள்ளி மாணவர்களின் கல்வி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என உறுதி அளித்தார். இதையடுத்து, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முதலாம் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் தொடங்குகிறது 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 – 27 வரையிலும், 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21- 26 வரை நடைபெறும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரையிலும், 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.