ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தும் விதமாக இரண்டு நாள் மாநாடு, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பு நடத்துகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சி என்னும் தலைப்பிலான ‘‘STATECON 2021’ மாநாடு தனியார் ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினகராக கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ,தமிழ்நாடு கிரெடாய் அறிக்கையையும் முதல்வர் வெளியிட்டார். அதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் என உறுதி கூறனார். தொடர்ந்து பேசியவர், 2031ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், சுமார் 9.53 லட்சம் மக்களுக்கு வீடு கட்டித் தரப்பட இருப்பதாகவும் கூறினார்.