1.30 மணி நேர பட்ஜெட் உரை நிறைவு; மக்களவை நாளை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.30 மணி நேரம் உரையாற்றி நிறைவு செய்தார்.  நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.  2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றிய அவர், துறை ரீதியாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சரியாக 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத்  தொடங்கிய அமைச்சர் 12.30 மணிக்கு நிறைவு செய்தார்.  விவசாயத் துறைக்கு பல்வேறு திட்டங்கள், எண்ம முறையில் கல்வி, எண்ம முறையில் பணப்பரிவர்த்தனை மையங்கள், கல்வி சேனல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின.  வருமான வரி விகிதம் குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

scroll to top