+1 தேர்வு முடிவு நாளை வெளியீடு

Pi7compressedstudents.jpg

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை(ஜூன் 27) ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 8,83,882 பேர் எழுதினர். ஏற்கனவே பத்து மற்றும் +12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியானது.இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.

scroll to top