ஹாஷ் 6 ஹோட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் மிக்ஸிங் திருவிழா நடைபெற்றது.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் தனியார் உணவக அரங்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேக் கலவை திருவிழா இன்று நடைபெற்றது.கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ப்ளம் கேக் தயாரிக்க தேவையான மிக்ஸிங்  திருவிழா கோவை  சாய்பாபா கோவில் எதிரில் உள்ள ஹாஷ்   6 ஹோட்டலில் இன்று  நடைபெற்றது. ஆண்டு தோறும் பாரம்பரியமாக நடைபெறும் இந்த விழா கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடக்க விழாவாக கருதப்படுகிறது, கேக் தயாரிக்கும் கலவையில் தேங்காய், முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்தா பழங்கள், ஆரஞ்சு தோல், கருப்பு கரும்பு, அத்திப்பழம், உலர்ந்த உப்பு, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு ஆகியவை அடங்கும்.  இந்த கேக் மிக்சிங் திருவிழாவில், கேக் தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களுடன் விஸ்கி, ரம், வோட்கா, ஜின் மற்றும் பீர் ஆகியவை தங்க சிரப், வெல்லப்பாகு, தேன் மற்றும் வெண்ணிலா சாறு ஆகியவற்றுடன் கேக் தயாரிக்க  200 கிலோ அளவில் கலவை கலக்கப்பட்டது,  கலக்கப்பட்ட 200 கிலோ கலவையின் மூலமாக 550 கிலோ முதல் 600 கிலோ வரை கேக் தயாரிக்க முடியும்.ஹாஷ் 6 உணவக  தலைவர் செஃப் ராஜா தலைமை வகித்து கேக் கலவை விழாவை துவக்கி வைத்தார், மேலும் இந்த நிகழ்ச்சியில்  கோயம்புத்தூர் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஹாஷ் 6 உணவக வாடிக்கையாளர்கள், பணியாளர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

scroll to top