ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் தேசிய உடல் உறுப்புகள் நின இணைய கருத்தரங்கம்

​​​​ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், தேசிய உடல் உறுப்புகள் தின கருத்தரங்கம் நடைபெற்றது.

தேசிய உடல் உறுப்புகள் தான தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டதையொட்டி கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், தேசிய உடல் உறுப்புகள் தான தினம்-2021 கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு உடல் உறுப்புகள் தானத்தின் அவசியம் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றுப் பேசினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் என். செழியன். உடல் உறுப்புகள் தானம் எதற்கு செய்ய வேண்டும்? அதற்கான தேவைகள் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எ.சுபாஷினி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர் நாகராஜன் நன்றி கூறினார்.

scroll to top