கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில்ää உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி சர்க்கரை நோயாளிகளுக்கான சங்கமம் என்ற கற்பித்தல் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது.
உலக சர்க்கரை நோய் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவனையில்ää இன்று உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி ‘சங்கமம்’ என்ற 48-வது சர்க்கரை நோயாளிகளுக்கான சர்க்கரை நோய் குறித்த கற்பித்தல் நிகழ்ச்சி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது.
டாக்டர் சுரேஷ் தாமோதரன் உடல் உட்சுரப்பியல் துறை “நீரிழிவு சிகிச்சைக்கான அணுகலின் முக்கியத்துவம்” பற்றி விளக்கினார். நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் டாக்டர் பி.சுகுமாரன் தலைமை வகித்தார். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் சுரேஷ் தாமோதரன் ‘சர்க்கரை நோயின் பாதிப்புகள், அதற்கு எடுக்க வேண்டிய சிகிச்சை முறைகள், தவிர்க்க வேண்டிய உணவுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’ குறித்து உரையாற்றினார். இதில் சர்க்கரை நோயாளிகள், உறவினர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.