கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவியருக்கான அழகுக்கலைப் பயிற்சி தொடங்கியது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் லாரியல் பாரிஸ், அசஞ்சர் மற்றும் சம்பவ் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சியை எஸ்.என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் சுவாதி ரோகித் துவக்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, “தற்காலத்தில் கல்லூரிப் படிப்போடு மாணவர்கள் தங்களின் திறன்களையும் வளர்த்துக் கொள்வது அவர்களுடைய வேலை வாய்ப்பிற்கும் சுயதொழில் முனைவோர் ஆவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதால் எங்கள் கல்லூரி மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் நோக்குடன் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அதன் ஒரு அங்கமாக இந்த அழகுக்கலைப் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.