ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி – கேப்ஜெமினி இன்ஜினியரிங் – புதுமை ஆய்வகம் துவக்க விழா

​கோவை வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து புதுமை ஆய்வகம் கல்லூரி வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு வரவேற்புரை வழங்கி இந்த புதுமை ஆய்வகத்தின் சிறப்பை எடுத்துரைத்தார்.

கேப்ஜெமினி இன்ஜினியரிங், ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியற் கல்லூரி உடன் வானூர்தி, கணினித்துறை, இண்டஸ்ட்ரி 4.0  மற்றும் ஐ.ஓ.டி ஆகிய 4 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  இந்த ஒப்பந்தங்களின் மூலம் தகவல் தொழில்நுட்பம்   மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கம்யூனிகேஷன், ஏரோ, மற்றும் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் என அனைத்து துறையை சார்ந்த பொறியியற் மாணவர்களுக்கும் கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றும் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடுத்த கட்டமாக, ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியற் கல்லூரி வளாகத்தில் 1500 சதுரடி பரப்பளவுள்ள ஒரு புதுமை மையம், ஆட்டோமோட்டிவ் துறைக்காக திறந்து வைக்கப்பட்டது.  விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாரயணசுவாமி விழாவிற்கு தலைமையேற்று பேசினார்.   இந்த நிகழ்ச்சியில் கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்தில் இருந்து ஸ்ரீ பிரசாத் ஷெட்டி, நிர்வாக துணைத் தலைவர் மற்றும் ராஜேஷ் கோசல்ராம், சஞ்சீவ் குப்தா, அதுல் குல்கர்னி போன்ற துறைத்தலைவர்கள் மாணவர்களுக்கு ஆய்வகத்தின் முக்கியத்துவத்தையும், ஆய்வக வசதிகளை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என உரையாற்றினர்.

கணேஷ் – ஆலோசகர் – (கல்லூரி தொழில்துறை இணைப்பு) நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி இதன் முக்கியத்துவத்தை விளக்கினார். கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் மற்றும் கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்தை சார்ந்த பல துறையை சார்ந்த உயர் அதிகாரிகள், 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

scroll to top