ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர்.அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக​ அறங்காவலர் டி.லட்சுமி நாரயண​சுவாமி தலைமை தாங்கினார்.

விழாவிற்கு கோவை, ராபர்ட் பாஸின்  மனிதவள மேம்பாட்டு துறை தலைவர், பொறியியல் மற்றும் வணிக தீர்வுகள் தலைவர் டி.வி . ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் , கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் ஒருங்கிணைந்த புதுமை கண்டுபிடிப்புகளின் மய்யம் சமீபத்தில் சகோ செயலியை பேராசிரியரின் மேற்பார்வையில் மாணவர்கள்  உருவாக்கியிருந்தனர் . இதனை  பாராட்டும் விதமாக, விழாவில் அவர்களுக்கு   சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர்.

முன்னதாக பல்வேறு  துறைகளில் சாதனை புரிந்த பேராசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவின் ஒரு பகுதியாக கல்லூரியில் தற்போது பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் இப்போது இருக்கும் நவீன யுக்திகள், தாங்கள் கல்லூரியில் கற்ற தொழிநுட்பத்திறன், வேலை வாய்ப்பு பயிற்சி கலந்து கொண்ட போட்டிகளின் பயிற்சி திறன் போன்றவறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எடுத்துரைத்தது பயனுள்ளதாக இருந்தது. விழா முடிவில் பேராசிரியர் உதயராணி நன்றி கூறினார் .

scroll to top