கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேசன் அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் 9 வது மாநில மாணவர் மாநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா வரவேற்புரையாற்றினார். எஸ் என். ஆர் சன்ஸ் கல்வி நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் சிறப்புரையாற்றினார். இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேசன் அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் டாக்டர் எ.சங்கரசுப்ரமணியன் தலைமையுரையாற்றினார்.
மாநாட்டின் நிகழ்வுகளை பற்றி ஐஎஸ்டிஇ அமைப்பின் கல்லூரி பொறுப்பாளரும் எலெக்ட்ரானிக்ஸ் துறை தலைவருமான ஆர்.வனிதா விளக்கி கூறினார். சிறப்பு விருந்தினராக கோவை, இண்டோசெல் நிறுவனத்தின் ஜூனியர் வைஸ் பிரசிடென்ட் டாக்டர் வி.எஸ். சரவணன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சிறப்பு அழைபாளர்களாக கலந்துகொண்ட ஐஎஸ்டிஇ அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் ஊட்டி சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி முதல்வர் ஜே.ஜோஸ்வா ஞானசேகரன் மற்றும் கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லுரி பேராசிரியர் செல்வகுமார் கந்தசாமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர். நடை பெற்ற நிகழ்வில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த ISTE மாணவர் விருது மாநில அளவில் தேர்வு பெற்ற 20 பாலிடெக்னிக் கல்லுரிகளை சார்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் இக்கல்லூரியை சார்ந்த இயந்திரவியல் துறை மூன்றாமாண்டு மாணவர் ஜே. ராஜா ஆனந்த் தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிபிடதக்கதாகும்.
இதனை தொடர்ந்து இவ்வமைப்பின் மாநில அளவிலான சிறந்த ப்ராஜெக்ட் விருது மூன்று பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும், ஸ்ரீனிவாச ராமானுஜ கணித விருது நான்கு கல்லூரிகளை சார்ந்த மாணவர்களுக்கும்.,இப்போட்டியில் அதிக எண்ணிகையிலான மாணவர்கள் கலந்து கொண்டதற்காக மூன்று கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன
மாலையில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில்.சிறப்பு விருந்தினராக கோவை, பிரிக்கால் நிறுவனத்தின் முதன்மை தொழிலநுட்ப அதிகாரி கே.கனகராஜ் கலந்துகொண்டு வினாடி-வினா, ப்ராஜெக்ட் தயாரிப்பு மற்றும் பவர் பாயின்ட் பிரசன்டேசன் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்வின் இறுதியாக கணிப்பொறி துறை தலைவர் ஆர். ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.