ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நிறைவு

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சென்னை மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய,‘நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான 7 நாள் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்’, நிறைவு பெற்றது.

7 நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 26 பல்கலைக்கழகங்கள், 72 கல்லூரிகளில் படிக்கும் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதன் நிறைவு விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ்  அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை  மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றார்.

கோவை மாநகரக் காவல் ஆணையர் பிரதீப்குமார் ஐ.பி.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் சென்னை நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரக மண்டல இயக்குநர் முனைவர் சி.சாமுவேல் செல்லையா, பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) முனைவர் ஆர்.அண்ணாதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் எஸ்.பிரகதீஸ்வரன், ஆர்.நாகராஜன், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக்குமார், பி.கீர்த்திவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 7 நாள் தேசிய ஒருமைப்பாட்டு முகாமைச் சிறப்பாக நடத்தியமையாக்காக, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமிக்கு, சென்னை நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரக மண்டல இயக்குநர் முனைவர் சி.சாமுவேல் செல்லையா பாராட்டுச் சான்று வழங்கினார். இதேபோல் முகாமில் பங்கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

scroll to top