ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.சி.டி. அகாடமி மூலமாக மாணவர் மேம்பாட்டு சிறப்பு மையத்தை அமைத்துள்ளது.
இதற்கான தொடக்கவிழா, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கணினி அறிவியல் மற்றும் காக்னிட்டிவ் சிஸ்டம்ஸ் துறைத்தலைவர் முனைவர் கிருஷ்ணபிரியா வரவேற்றார். ஐ.சி.டி. அகாடமியின் திட்டங்கள் செயலாக்கப்பிரிவு தலைவர் கே.ஏ. விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “சென்டர் ஆஃப் எக்ஸலென்ஸ்” எனப்படும் மாணவர் மேம்பாட்டு சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் ஐ.சி.டி. அகாடமி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்பத்துறை இணை பேராசிரியை முனைவர் சி.தீபா நன்றி கூறினார்.