ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

alumni.jpeg

​ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘சீனியர் செனாரியோ-2023’ என்ற தலைப்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதையொட்டி கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கல்லூரி தொடங்கிய காலம் முதல் தற்போது வரையுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்கள், கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிடும் வகையிலான புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதை பல ஆண்டுகள் முன்னர் படித்த  முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு தங்கள் குடும்பத்தினருடன் கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கல்லூரி வளாகத்தைப் பார்த்து பரவசம் அடைந்தனர்.

தங்கள் படித்த துறைகளுக்குச் சென்று ஆசிரியர்களைப் சந்தித்து உரையாடினர். பின்னர் தங்களது நண்பர்கள், தோழிகள் தங்கள் நண்பர்களை சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர். அப்போது தங்களுடைய நினைவலைகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர் சங்க பிரமாண்ட விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி விழாவில் சிறப்புரையாற்றினார். ​ ​அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.  முன்னாள் மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். பின்னர் கண்கவர்​​ கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் முனைவர் ஆர்.பிரபு, செயலர் முனைவர் ஜி.செந்தில்குமார் உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

scroll to top