கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் தலைமை வகித்தார்.கோயம்புத்தூர் தேசிய மாணவர் படை தலைமையிடப் பயிற்சி அலுவலர் லெப்டினன்ட் கர்னல் தினேஷ்குமார் பத்தக், விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேசியக் கொடியேற்றி வைத்தார். விழாவின் சிறப்பு நிகழ்வாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.முன்னதாக பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் தலைமையில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள், தேசியக் கொடியை ஏந்தியவாறு, கல்லூரி வளாகம் வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சுதந்திர தினவிழாவில் கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கோலாகலம்
