ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்

Pi7compressedWhatsAppImage2022-05-23at4.10.55PMcopy.jpg

ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை சார்பில், ‘கணிதம் மற்றும் புள்ளியியல் துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பின்னர் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, ஆய்வுச் சுருக்கம் அடங்கிய நூலை வெளியிட்டார். சென்னை வி.ஐ.டி. கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வி.பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கருத்தரங்க உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மலேசியா பல்கலைக்கழக ஆக்சுவேரியல் அண்டு குவான்டிடேட்டிவ் ஸ்டடீஸ் இயக்குநர் முனைவர் ராஜசேகரன் ராமசாமி கணிதம் மற்றும் புள்ளியியலின் பங்களிப்பு குறித்து இணையவழியில் உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் 89 பேர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். முன்னதாக கணிதத் துறைத்தலைவர் முனைவர் என்.உமா வரவேற்றார். முடிவில் கல்வியியல் புல டீன் முனைவர் எஃப். ஹென்னா ரேவதி நன்றி கூறினார்.

scroll to top