ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி யில், 73-வது குடியரசு தினவிழா இன்று (ஜனவரி 26) கொண்டாட்டப்பட்டது. நாட்டின் 73-வது குடி யரசு தினவிழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிமையாகக் கொண்டாடப்பட்டு வருகி றது. இதன்படி கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டா டப்பட்டது.
விழாவிற்கு ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் நாட்டின் குடியரசு தினத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து பெங்களூருவில் நடை பெற்ற குடியரசு தின அணி வகுப்புக்கான தென்னிந்திய முகாமில் பங்கேற்ற, நாட்டு நலப்பணித்திட்ட மாணவி ஐ.பவ்யா, புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய மாணவர் படையினருக்கான துப் பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவர் எம்.பிரதீப் ஆகியோர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர்கள் எஸ்.பிரகதீஸ்வரன், ஆர்.நாகராஜ், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக்குமார், தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் இ.விவேக் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top