ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் கோவை விழாக் குழுவினர் இணைந்து பாரம்பரியப் பண்பாட்டு விழா 2023 யினை கல்லூரி வளாகத்தில் மிக கோலாகலமாகக் கொண்டாடினர். முனைவர்.கி.சித்ரா கல்லூரி முதல்வர் இவ்விழாவிற்கு தலைமைத் தாங்க, முனைவர்.வெ.நிர்மலா தமிழ்த்துறைத் தலைவர் அனைவரையும் வரவேற்றார். கொங்குத் தமிழினி தெ. சாந்தாமணி பட்டிமன்றப் பேச்சாளர் சிறப்பு விருந்தினராக வருகைப் புரிந்தார். விழாவில் தமிழ், தமிழர் கலை, இலக்கிய வாழ்வு நலிந்துள்ளதா? வளர்ந்துள்ளதா? என்னும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிராமிய நடனம், பொங்கல் வைத்தல், வண்ணமிகு மாக்கோலம், உரியடித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரியப் பண்பாட்டு விழா
