ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்புவிழா

2-g.jpg

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்புவிழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்  கி. சித்ரா அனைவரையும் வரவேற்றுப் பட்டம் பெறும் மாணவியரை வாழ்த்தினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் துணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, நாம் நிறைய சவால்களைக் கடந்து வந்திருக்கும் சமீபகால மாற்றங்களுக்கிடையில் நமக்கான வாய்ப்புகளும் மிக அதிகமாகியிருக்கிறது என்றார்.

பெங்களூரில் உள்ள யூசர் எக்ஸ்பீரியன்ஸ் அன்ட் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயராணி குமார் அவர்கள் மாணவியருக்குப் பட்டம் வழங்கிச் சிறப்புரையாற்றினார். பழமையின் பெருமையும் புதுமை வாய்ப்புகளும் இணைந்து உருவான கல்வித்தலைமுறையைச் சேர்ந்த நீங்கள், உங்களுடைய சுயஅடையாளம், கற்றல் மற்றும் உங்கள் வாழ்க்கை உள்ளிட்ட அனைத்திலும் இந்த இரு அனுபவங்களையும் இணைந்து பெற்றிருக்கிறீர்கள் என்று கூறிய அவர் பட்டம் பெற்ற மாணவியரை வெகுவாகப் பாராட்டினார்.

5 தங்கப்பதக்கம் உட்பட 24 மாணவியர் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றனர்.  விழாவில் இளநிலை, முதுநிலை மாணவியர்  642 பேர்  பட்டம் பெற்றனர். 

scroll to top