ஸ்ரீஆண்டாள் திருகல்யாணத்திற்காக, திருப்பதியில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்த பட்டு வருகை

WhatsApp-Image-2023-04-04-at-19.30.05.jpg

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளை 5ம் தேதி (புதன் கிழமை) ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் சீரும், சிறப்புமாக நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து வருகிறது. ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியின் போது அணிதற்காக, திருப்பதி பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்து களைந்த பட்டு வஸ்த்திரம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக திருப்பதி ஸ்ரீஏழுமலையான் கோவிலில் இருந்து, ஸ்ரீஏழுமலையான் அணிந்து களைந்த பட்டு வஸ்த்திரம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதியிலிருந்து கோவில் நிர்வாகிகள் கொண்டு வந்திருந்த பட்டு வஸ்த்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் அனைத்தும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. நாளை இரவு நடைபெற உள்ள ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது, ஸ்ரீஆண்டாள் ஸ்ரீஏழுமலையான் வழங்கிய பட்டு வஸ்த்திரங்களுடன் எழுந்தருளி காட்சி கொடுப்பார். ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

scroll to top